Wednesday, October 13, 2010

யாழ்சேவை அறிவிப்பாளருக்கும் எயிட்ஸ் ..?

இவர் அமைச்சர் டக்கிளசின் விருப்புக்குரியவர் . இவர் வெளியில் நடமாடும் போது மிகவும் எடுப்பான தோற்றத்திலும் உயர்ந்த பீடத்தை சேர்ந்தவர் போன்ற தோற்ற பாட்டில் தன்னை அடையாளம் காட்டி கொள்ளும் இவர் மிகவும் கவர்சிகரமான விதத்தில் உரையாடுவதால் பெண்கள் இவர் வலையில் மயங்கி தமது கற்பை பறி கொடுத்து செல்கின்றனர் .

இவ்வாறு பலர் பாதிக்க பட்டுள்ளனர் . இவரோடு உறவு வைக்கும் பெண்களிட்க்கு எயிட்ஸ் நோய் தோற்று வரக்கூடும் என இவரால் பாதிக்கக் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் . ஏன் எனில் கச நோய் வியாதிக்கு தற்போது யாழில் பாதிக்கக் பட்டவர்கள் எயிட்ஸ் நோய் தாக்கத்திட்க்கு உள்ளாகி இருப்பது யாழ் போதனா வைத்திய சாலையில் அதிகம் இனாம் காணப்பட்ட நிலயிலேயே இவ்வாறானவர்கள் அவ்வாறன உயிர் கொல்லி நோய் தாகக்திட்க்கு உள்ளாக்க பட்டிருக்காலாம் என மருத்துவ குறிப்புக்கள் தெரிவித்துள்ளான் .

யாழ் பிரபல பாடசாலைகளின் பெண்கள் பலர் கர்ப்பம்

யாழ் பிரபல பாடசாலைகளின் பெண்கள் பலர் கர்ப்பம் தரித்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் கருவழிப்பு நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர் .ஜிம்முக்கு போன வேளை தமது வயிறு பெருத்து விட்டதாக பாதிக்க பட்ட பெண்கள் கூறியுள்ளனர் . தாம் சில வேளை மட்டுமே உறவு கொண்டதாகும் ஆனால் கரு வெளியில் கழிக்க பட்ட போதும் தாம் கர்ப்பம் தரிதுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தமக்கு மாத விடாய் வரவில்லை அதனால் என்ன விடயம் நடந்து என்ற கோணத்தில்பேசியுள்ளனர் . இவர்கள் தவறான முறையில் கர்ப்பாமாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சிங்களம் விதித்த இந்த கலச்சார சீரழிவு எயிட்ஸ் நோயில் இருந்து எமது சமுகத்தை காக்க மீண்டும் விடுதலை புலிகளின் வரவை யாழில் மக்கள் எதிர் பார்கின்றனர் .

யாழ் பண்ணை பகுதியில் விபச்சாரம்

யாழ் பண்ணை பகுதியில் அமைந்துள்ள பிரபல தொலை தொடர்பு கட்டிடத்தில் அமைந்திருக்கும் பாரிய கட்டிட தொகுதிக்கு அருகில் விபச்சாரம் நடை பெறுகின்றது .

அங்கு வரும் பெண்கள் அங்கு பணியாற்றும் நபர்களுடன் லீலைகளில் ஈடு படுகின்றனர் . இங்கு பணி புரிபவர்கள் மற்றும் அங்கு வருகை தரும் நபர்களும் இந்த பெண்களுடன் உறவுகளை வைத்துள்ளனர் . இங்கு வருகை தரும் இளம் பெண்கள் விலை பேச பட்டும் விபச்சராம் நடை பெறுகின்றது . யாழ் பகுதி இவ்விதாமன் சீரழிவு நடவடிக்கையால் எயிட்ஸ் என்ற கொடிய நோய் தூர்நாற்றம் எடுக்க ஆரம்பித்துள்ளது . இதை தடுத்து நிறுத்துவது யார் ..? இது தான் இன்றைய நமது கேள்வி ..? பெற்றோரே உங்கள் பிள்ளைகள் நடவடிக்கையில்கண்காணிப்பாக இருங்கள்

தானாக இயங்கும் கார்கள் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளன

இந்த ரோபாட்களுக்கு தூக்கம், மயக்கம், சோர்வு என்பது வரவே வராது. தானாக இயங்கும் இந்த கார்கள் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளன. எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. எளிதில் எந்தவித வைரசும் இதில் தொற்றாது. சமீபத்தில் இந்த வகை ரோபாட் கார்களை கூகுள் நிறுவனம் சான்பிரஸ்சிஸ் நகரில் உள்ள சாலைகளில் இயக்கி சோதனை செய்தது. அப்போது போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளிலும் இந்த கார்கள் வேகமாக சென்று பிரமிக்கச் செய்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கார்களில் எந்ததெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது பற்றி இதில் உள்ள சாப்ட்வேரில் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட சாலைகளில் இவை சரியான வேகத்தில் செல்கிறது.

இந்த கார்கள் மலைப் பாதைகளிலும் மிகவும் சரியாக இயங்குகிறது. இதையும் விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்து விட்டனர். ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அடையாள குறியீடுகளை இந்த காரில் உள்ள “சென்சார்” கருவிகள் கவனித்து ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது. இதை உருவாக்கி உள்ள பிரபல “ரோபட்டிக்” விஞ்ஞானி கிறிஸ்டோபர் உர்ம்கர் கூறும் போது, “இந்த ரோபாட்டிக் ரக கார்கள் அடுத்த தலைமுறையில் மிகவும் பிரபலமாகி விடும். அனைத்து நாடுகளிலும் ரோபாட் கார்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.

இக் கார்களில் பயணம் செய்பவர்கள் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் அந்த இடத்திற்கு சென்றதும் நின்று விடும். இக் கார்களில் செல்லும் போது பக்கத்தில் எந்த வாகனத்துடனும் மோதி விடுமோ என்று பயப்பட தேவையில்லை. காரில் உள்ள சென்சார் கருவி மற்ற வாகனம் நெருங்கி வருவதை அறிந்து “டக்” கென விலகி விடும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த வகை கார்களை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்துள்ளோம். முழு வெற்றி கிடைத்துள்ளது” என்றார். தானாக இயங்கும் இந்த ரோபாட்டிக் கார்களை நம் நாட்டில் இயக்கினால் பெருமளவு விபத்துக்கள்

கொக்காவிலில் புதிய தொலை தொடர்பு கோபுரம்அமைத்து முடிவு

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் 172மீற்றர் உயரமுடைய தொலை தொடர்பு ராட்சத கோபுரம் அமைத்து முடிவடைந்துள்ளது .இதன் ஊடாக தொலைபேசி .தொலைகாட்சி .வானொலி போன்றன உரிய சம நேரத்தில் ஒளி ஒலிபரப்ப படும் என தொலை தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .இந்த கோபுரம் அந்த பகுதியில் அமைக்க பட்டத்தை அடுத்து வன்னி பகுதியில் தொலை தொடர்பு சேவைகள் சீராக இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது . இந்த கோபுரம் அமைப்பதற்க்கு சுமார் 150மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பட்ட பகலில் நகை கடையில் 5லட்சம் கொள்ளை -மக்கள் அதிர்ச்சி

மஹரகம நகரில் உள்ள நகை கடை ஒன்றில் பட்ட பகலில் உள்ளே துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து லட்சம் ரூபாய் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

இவர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் மூவர் படுகாய மடைந்துள்ளனர் . போலீசார் தமது விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை திருடர்களை சிக்கவில்லை .இந்த பட்ட பகல் கொள்ளையால் அந்த பகுதி அதிர்ந்து போய் உள்ளது

நீரில் மூழ்கி நால்வர் பலி

மட்டகளப்பு பாண்டுர பகுதியில் நீரில் மூழ்கி நால்வர் பலியாகியுள்ளனர் .மட்டகளப்பு வாவியில் குளித்து கொண்டிருந்த இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் அதேபோல பண்டுற பகுதியிலும் இருவர் இவ்வாறு பலியாகியுள்ளனர் . சடலங்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .
கடந்த காலங்களில் நீரில் மூழ்கி இறந்துவருபவர்களின் தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

வன்னியில் வறுமையினால் தமிழர் தற்கொலை அதிகரிப்பு

வன்னியில் யுத்தத்தின் சிதைவால் புலம் பெயர்ந்து அகதிகளாகி அலைந்து குந்த இடம் இன்றி சிறு குடிசையில் தங்கி வாழும் மக்கள் அங்கு நிலவும் வறுமை காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர் . இந்த தற்கொலை வாரம் தோறும் அதிகரித்து வருகின்றது .ஆனல் இந்த தற்கொலை சம்பவங்களை இராணுவம் போலீசார் திட்டமிட்டு மறைத்து வருவதன் ஊடாக இவை வெளியில் தெரிய வரவில்லை என அந்த பகுதிக்கு விஜயம் செய்த நமது யாழ் நிருபர் மறவன் தெரிவித்துள்ளார் .

இந்த மக்களை காகக் வேண்டிய பொறுப்பில் புலத்து தமிழர்கள் உள்ளனர் .அவர்கள் இந்த வரலாற்று பணியை நேரடியாக பாதிக்க பட்டவர்களிட்க்கு செய்ய தவறும் பட்சத்தில் எமது தமிழ் இனம் மேலும் பலரை பலி கொடுக்க வேண்டி வரும் என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார் .

ஜனாதி பதிகளின் மனைவி மார் கூட்டம் மலேசியாவில்

மலேசிய கோலாம்பூரில் நடைபெறும் முப்பத்தி இரண்டு நாடுகளை சேர்ந்த இருபத்தி இரண்டு நாடுகளின் அதிபர்களின் மனைவி மார் கலந்து கொள்ளும் இவ்வருடத்திட்க்கான கூட்ட தொடர் இன்று தொடக்கம் நாளை மறு தினம் வரை நடைபெறுகின்றது .

இந்த நிகழ்வில் அந்த நாட்டின் முதல் தர பெண்மணிகள் என கூறப்படும் அந்த நாட்டு அதிபர்களின் மனைவியர் மற்றும் அமச்சர் மார்கள் பொது அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கெடுத்து கொள்கின்றனர் . இதில் இலங்கை ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சவும் கலந்து கொள்கின்றார்

30 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சுங்கத்துறையினரின் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ளன

30 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சுங்கத்துறையினரின் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ளன. சுங்கத்துறையின் அத்தியட்சகர்சாகர மகாநாம இதனை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இதன் அடிப்படையி;ல் சுங்கப்பகுதியினர் முதலில் பொதி அஞ்சல் சேவையை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனையடுத்து பொதி பரிசோதிக்கும் களஞ்சியம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது

சுங்கத்துறையின் அலுவலகங்கள் பருத்தித்துறை வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன

ஈழ தமிழ் வாலிபனின் புதிய உலக சாதனை -திகில் காட்சி


தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டியில் அவுஸ்ரேலியா ரீதியாக பங்கெடுத்த பிரசாந் செல்லத்துரை இரண்டு தங்க பதங்கங்களை வாங்கி தந்ததுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றார . இவரது இந்த சாதனைக்கு எமது வாழ்த்துக்கள் .

போராளி ஒருவர் நான்காவது தடைவையாக கனடாவிட்க்குள் நுழைந்த வேளை-சிறை பிடிப்பு


தமிழீழ விடுதலை புலிகளின் தொட்ரபுகளை பேணிய போராளி என கருதப்படும் நபர் ஒருவர் கனடாவில் பல முறைகேடுகளை செய்ததை அடுத்து நாடு கடத்த பட்டார் .அதை தொடர்ந்து பலமுறை வேறு நபர்களின் பெயர்களில் கனடாவிட்க்குள் உள் நுழைய முனைந்த வேளை கைது செய்ய பட்டு திருப்பி அனுப்படார் .

அவ்வாறாக கடந்த பத்து நாடக்ளிட்க்கு முன் நாடு கடத்த பட்ட இவர் ஹாங் காங் சென்று அங்கிருந்து கண்டாவிட்க்குள் நான்காவது தடவையாக புக முனைந்த வேளை குடிவரவு குடியகல்வு பிரிவினரால் சிறை பிடிக்க பட்டுள்ளார் .

இவரது உறவு காரர்கள் கனாடாவிட்குள் இவருடன் தொடர்புகளை பேணி வந்த போதும் இவர் அங்கு உள்ள எவருடனும் தனக்கு தொடர்பு இல்லையென கூறியுள்ளார் என குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

கொழும்பை சுற்றி கண்காணிக்கும் 108நவீன கமராக்கள்

இன்று தொடக்கம் கொழும்பு நகரை சுற்றி சுமார் நூற்றி எட்டு அதி நவீன கமராக்கள் கண்காணிப்பில் எட்டு பட்டுள்ளன .இவை பயங்கரவாதம் ,போக்குவரத்து .கொள்ளை மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்தும் நோக்குடன் இந்த காமர்க்களை விசேட சிறப்பு பயிற்சி பெற்ற படை துறையினரால் காண்காணிக்க பட்டு வருகின்றன என பாது காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Friday, October 8, 2010

சிங்கள மக்கள் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மணியன் தோட்டம் பகுதியில் வசித்ததாக தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக சென்று சிங்கள மக்கள் தாம் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மணியன் தோட்டம் பகுதியில் வசித்ததாக தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில் அந்த இடத்தில் தற்போது தமிழ் மக்கள் குடியிருப்பதால் அதனை தமக்கு தரவேண்டாம் என தெரிவித்துள்ள அவர்கள் அரச காணிகளில் தம்மை குடியமர்த்துமாறு கேட்டுள்ளனர்.

தற்போது சுமார் 180 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளதாக குடியேற வந்த சிங்களவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

தாம் படித்தது தமது பெற்றோர் வர்த்தகம் செய்தமை யாவும் யாழ்ப்பாணத்தில்தான் எனக்குறிப்பிட்டுள்ள அவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் காரணமாக தாம் சேனைக்குடியிருப்புக்கு சென்று பின்னர் அநுரதப்புரத்தின் மிகிந்தலைக்கு சென்று வாழ்ந்து வந்ததாக இந்த சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

தாம் தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவே யாழ்ப்பாணம் வந்ததாகவும் எனினும் அரசாங்க அதிகாரிகள் உரிய வசதிகள் எதனையும் செய்து தரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் ஏற்கனவே வசித்த இடம் என்பதால் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமலேயே யாழ்ப்பாணம் வந்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமக்கு தற்போது தமிழ் மக்களே உதவிசெய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

30 வருடங்களுக்கு பின்னர் வந்திருப்பதன் காரணமாக தற்போதுள்ள இளைஞர்கள் யுவதிகள்சிங்களவர்கள் ஏன் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள் என்ற நிலையில் தம்மை பார்ப்பதாகவும் எனினும் வயது முதிர்ந்தோர் தம்மை வந்து சந்தித்து செல்வதாகவும் இந்த சிங்கள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

எனினும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக குடியிருந்தமைக்கான எவ்வித உறுதிகளும் இல்லை என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பின் பேரிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகயை எடுக்கமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆராய தாம் நேரடியாக சென்று அவர்களை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்

ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் செல்லவுள்ளார்.

சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் செல்லவுள்ளார். அக்டோபர் 19ம் திகதி இவர் லண்டன் சென்று மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக தற்போது கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை தனது கவனத்தை திருப்பியுள்ளது.

ஜி.எல் பீரிஸால் நடாத்தப்படும் இம் மாநாட்டை பிரித்தானியா வாழ் ஒவ்வொரு தமிழர்களும் எதிர்க்கவேண்டும். கடந்த வருடம் மே மாதம் போரை நிறுத்தச்சொல்லி எவ்வளவு தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்களோ, அது போன்ற பேரெழுச்சி ஒன்று அக்டோபர் 19ம் திகதி வெடிக்கவேண்டும்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து தற்போது பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க மாநாடு போடும் ஜி.எல் பீரிசுக்கு தமிழர்கள் ஒற்றுமை என்றால் என்ன எனக் காட்டவேண்டி நிலை தற்போது தோன்றியுள்ளது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது, இனி என்ன இருக்கிறது என்று எமது இனம் துவண்டுபோயுள்ள நிலையில், எமது இனத்தினை சீர்குலைக்க இவர்கள் முதல்கட்ட காய் நகர்த்தலாக மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

புலிகளின் வலைப்பின்னல் வலுவாக உள்ளது, அவர்கள் சர்வதேச ரீதியாக இயங்குகிறார்கள் என பிரித்தானிய அரசின் காதுகளில் ஓத இவர்கள் புறப்பட்டுள்ளனர். இவர்களோடு தெற்காசியாவின் தீவிரவாதத்தை ஆராய்வதாகக் கூறிவரும் சிங்கள புத்திஜீவியான ரொஹான் குணரத்னவும் பிரித்தானியா வருகிறார். அவரின் கைகளில் எவர் மாட்டினாலும் அந்த நபரை மூளை சலவை செய்வதில் ரோகான் குணரத்ன கில்லாடி. இவர்கள் இணைந்து பிரித்தானியாவில் நடாத்தவிருக்கும் மாநாட்டிற்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஒன்றுதிரண்டு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்!

இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்! :அனலை நிதிஸ் ச. குமாரன்

ராஜீவ் கொலை விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் நீதித்துறை அரசியல் அழுத்தம் காரணமாக, நீதி தேவதையின் கண்களை நிரந்தரமாகவே மூடிவிட்டுத்தான் விடுதலைப்புலிகள் மீது அபாண்டமான கொலைக்குற்றத்தை சுமத்தி, அதன் மீதான தடையை விதித்தது.
ஈழம் என்று கூறினாலே குற்றமென்ற நிலை இந்தியாவில். பொடா சட்டத்தின் மூலமாக பயமுறித்தி மானமுள்ள தமிழரின் வாயை மூடியது இந்திய அரசு.

அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டே வந்தார்கள். ஒரு சிலரைத்தவிர, பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே புலியென்ற வார்த்தையை கூறினாலே கிலிகொண்டு ஓடும் பரிதாப நிலை. ஈழம் வரை சென்று புலிக்கொடி ஏற்றிய ராஜராஜனை போற்றி விழா நடத்துபவர்கள், பாவம் அவனின் வம்சாவளியினர் இன்று மரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றார்கள். ராஜராஜனின் மன்னர்கள் ஆண்ட ஈழத் தேசம் இன்று சிங்களத் தேசமாக மாற்றப்படுகின்றது.

தமிழக அரசோ சிங்கள அரசியல்வாதிகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளித்து, தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளுக்கும் உல்லாசப் பயணம் செய்ய அனுமதிக்கின்றது. ஆனால், ஈழத்தமிழர் மீது பல தடைகளை போட்டு அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு பிரயாணம் செய்தால் காவல்துறையினர் புலி என்று பொய்க்குற்றம் சுமத்தி கைது செய்கின்றது. இது தான் இன்றைய தமிழக நிலை.

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதென சபாநாயகர் அறிவிக்கவில்லை

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதென சபாநாயகர் அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடமாகினால் அது குறித்து சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பது வழமையான நியதியாகும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு வேறும் ஓருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எவ்வாறு அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாடாளுமன்ற நியதிகளுக்கு முரணானதென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது உறுப்புரிமை உடனடியாக ரத்தாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் சுவரொட்டி ஒட்டுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை என்பனவற்றுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாரிய போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகத் தெரிவித்து அச்சிடப்பட்டுள்ள சுவரொட்டிகளை எதிர்க்கட்சித் தலைவர் ஒட்டி, சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மெனிக்பாம், வலயம் நான்கு முகாமில் உள்ள மக்கள் தொற்றுநோய் எதிர்நோக்கும் அபாயம்

வவுனியா மெனிக்பாமில் உள்ள வலயம் 4 ல் சுமார் 3,700 மக்கள் வசிக்கின்றனர். இவர்களை இங்கிருந்து கதிர்காமர் முகாமிற்குச் செல்லுமாறு இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர்.
இங்குள்ள மக்கள் அங்கு வசதிகள் காணாது என்றும் ஒவ்வொருமுகாமாகத் தாங்கள் மாறுவதற்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்து தொடர்ந்தும் இங்கேயே தங்கி வந்தனர்.

இந்நிலையில் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து இந்த வலயத்திற்கு மனிதக் கழிவுகளை அகற்றும் ஊர்திகளை பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தி விட்டனர். குப்பை அள்ளும் வண்டிகள்கூட வருவதில்லை.

இதற்கு முன்பு ஊர்திகள் தினமும் வந்து சுத்தம் செய்தன. வாகனங்களை இப்படித் திடீர் என நிறுத்தியது அந்த மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

3700 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட மலக்குழிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மலக்கூடங்களும் பாவிக்கப்பட முடியாமல் உள்ளது. மலக்கூடங்களில் புழு நெளிகின்றது.

மக்கள் சொல்லொணாத் துன்பம் அனுபவித்து வருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

தற்பொழுது மழை பெய்து வருவதால் கழிவுநீரும் மழைநீரும் சேர்ந்து மக்களின் குடியிருப்புக்குள் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

முன்பு இயங்கி வந்த மருத்துவமனையும் மூடப்பட்டு அதற்குப் பதிலாக நடமாடும் சேவை வழங்கப்பட்டது. இப்பொழுது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.

கதிர்காமர் முகாமில் விறகு, தண்ணீர் போன்றவற்றிற்கத் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இங்கிருப்பவர்கள் கதிர்காமர் முகாமிற்குச் செல்ல மறுக்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முகாமைவிட்டு வெளியேற மறுத்ததால்தான் இப்படித் தங்களைத் துன்புறுத்துகின்றனர் என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள மக்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைக் கேட்டுள்ளனர்.

தாம் உரியவர்களுடன் கலந்துபேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் கூறியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சரத் வழக்கில் இருந்து தாம் விலகுவதாக நீதியரசர் லேகம் வசம்

சரத் பொன்சேகாவுக்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பேராணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று நீதியரசர்களான சத்யா ஹெட்டிகே மற்றும் லேக்கம் வசம் ஆகியோரின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கில் இருந்து தாம் விலகுவதாக நீதியரசர் லேகம் வசம் தெரிவித்தார்.


அதனையடுத்து இவ் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நீதியரசர் சத்தியா ஹெட்டிகே இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு சரத் பொன்சேகாவின் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது.

இதனை அடுத்து இந்த வழக்கு எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நீதியரசர்களான கோகுல் குலதுங்க மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விமல் வீரவன்ஸவும், கெஹலிய ரம்புக்வெலவும் கூறியிருப்பது அப்பட்டமான பொய்

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் மன்னிப்புக்கோரியே சிறையிலிருந்த தனது கணவரான விஜயகுமாரதுங்கவை விடுவித்ததாக அமைச்சர்களான விமல் வீரவன்ஸவும், கெஹலிய ரம்புக்வெலவும் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ள சந்திரிகா தான் சட்டவழியிலேயே தனது கணவரை விடுவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி பொது செயலாளர் நாயகம் டெனிஸ் ஹலிடேய் சர்வதேச விசாரணை தேவை


இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் இலங்கை மீது சுயாதீனமாக, சர்வதேச விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி பொது செயலாளர் நாயகம் டெனிஸ் ஹலிடேய் தெரிவித்துள்ளார்.
ஐரிஸ் டைம்ஸ் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இரு தரப்பும் மேற்கொண்ட யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறைகள் என்பவை மறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவை சர்வதேசத்தின் முன்னால் தவிர்க்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டப்ளினில் இடம்பெற்ற இரண்டு பொது கூட்டங்களின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் போது, தெற்காசிய நாடுகளின் யுத்த குற்றச் சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் போது இலங்கையில் யுத்த காலத்தில் சட்டத்துக்கு முரணாக இடம்பெற்ற கொலைகள், வைத்தியசாலைகள் மீது இராணுவத்தினர் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற சம்பவங்களுக்கான காணொலிகளும் ஒளிபரப்பப்பட்டன.

இந்த கூட்டத்தில், இலங்கை தொடர்பிலான டப்லின் மக்கள் நீதிமன்றத்தில் அங்கம் வகித்த நீதிபதி லோவ்லரும் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது சுமார் 20 க்கும் அதிகமானவர்களின் சாட்சியங்கள் பெறப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான எழுத்தாவணங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இவை இலங்கை அரசாங்கத்தின் யுத்தகுற்றச்சாட்டுக்கான ஆதாரங்களாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கூட்டத்தின் போது, கடந்த 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை முறிந்து போனமைக்கு, அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Wednesday, October 6, 2010

இலங்கை ஊடாக சீனா ஆயுதக் கடத்தல்: அதிர்ச்சித் தகவல்


இலங்கையை தளமாகக் கொண்டு ஆசிய நாடுகளில் உள்ள சில முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆயுதங்களை வழங்கிவருவதாக 150 பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை றோ அமைப்பு தயாரித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவுக்கு எதிராகச் செயல் படும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு கைக்குண்டுகள் உட்பட, வெடிபொருட்களையும் வினியோகித்துள்ளது. 2007ம் ஆண்டு பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்தவேளை அதனை புலிகளின் கப்பலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை இட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இக் கப்பல் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், இது பங்களாதேஷ் நோக்கிச் செல்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான சான்றிதழ்கள் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இக் கப்பலை இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தடுத்துவைத்தனர். கப்பலில் ARGES 84 என்று அழைக்கப்படும் கைக்குண்டுகளும், வெடிபொருட்களும் இருந்தாகக் கூறப்படுகிறது. பின்னர் பாகிஸ்தான் இராணுவம் கடும் அழுத்தத்தைப் பிரயோகித்து அக்கப்பலை விடுவித்ததாகவும், பின்னர் அக்கப்பலில் உள்ள தளபாடங்களை சீனக் கப்பல் ஒன்று ஏற்றிக்கொண்டு பங்களாதேஷ் சென்றதாகவும் அறியப்படுகிறது.

சிங்கா படையணிமீது கோத்தபாயவுக்குச் சந்தேகம்!


சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக ஆகுவதற்கு முன்னர் அவரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் இயங்கிவந்த சிங்கா படையணியைக் கலைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்படையணியானது சரத் பொன்சேகாவுக்கு விசுவாசமான படையணி என்பதால் அப்படையணிமீது கோத்தபாய சந்தேகம் கொண்டுள்ளார். அப்படையணியில் உள்ள அதிகாரிகள் எவருமே ஜனாதிபதியால் அல்லது பாதுகாப்புச் செயலாளரால் நியமிக்கப்படவில்லை என்பதே அவரது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

சிங்கா படையணியில் இருந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் முன்னறிவித்தல் எதுவுமே விடுக்கப்படாமல் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், அம்பேபுஸ்ஸ சிங்கா படையணியில் வசிக்கும் சிங்கத்தை தெகிவளை மிருகக் காட்சிச் சாலையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவாம்.

18 வயதான தமிழ் பெண்கள் இரவுநேரக் கேளிக்கை விடுதிகளில்: நாம் எங்கே செல்கிறோம் ?சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இதை எழுதத் தூண்டுகிறது: தூயவன்


அண்மையில் நோர்வே நாட்டின் தலைநகரான ஓசிலோவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அங்கு நான் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட எனது மருமகன் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டான், மாமா உங்க லண்டனில அல்ககோல்(alcohol) எல்லாம் சீப்பாமே ! நல்ல வொட்க்கா(Vodka) இருந்தா ஒருபோத்தல் வாங்கிவாறீங்களா நான் காசு தாரேன். எண்ட நண்பர் கேட்டார் அதுதான். அப்போது நான் உணக்கு எத்தனை வயதடா என்றேன் ? எனக்கு 18 என்றான். அப்ப உன் நண்பனுக்கு எண்டு நான் இழுக்க… அவருக்கு 21 என்று பதில் வந்தது.

நண்பன் தனது வீட்டிற்க்காகத்தான் அதைக்கேட்கிறார் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக என் மருமகன் கூறியதால், விமான நிலையத்தில் உள்ள டியூட்டி பிரீ ஷாப்பில் அதை வாங்கிச் சென்றிருந்தேன். என்ன தான் இருந்தாலும் என் மருமகன் எனக்கு முன் தண்ணியடிக்க மாட்டான் என்ற அசாதாரண நம்பிக்கை. அது மட்டுமல்ல உண்மையாகவே, மதுபாணங்கள் நோர்வே நாட்டில் மிகக் கூடுதலான விலைக்கு விற்கப்படுவது யாவரும் அறிந்த விடையம் ! அதுவும் நண்பனுக்கு என்று சொல்லுவதால் அதை வாங்கிச் சென்றேன். ஓசிலோ சென்ற நான் எனது வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு பின்நேரம் இளைப்பாற ஹோட்டலுக்குச் சென்றேன். எனது மோபைல் அலறியது.

எனது மருமகன்,…. மாமா வாங்கிட்டு வந்தனீங்களா ? ஓமடா, ஓகே நான் அங்க வந்து எடுக்கிறேன்.. நீங்கள் ஹோட்டலில் நில்லுங்கோ என்றான். பின்னர் திடீரென நீங்கள் தங்கியிருப்பது பெரிய ரூமா மாமா என்றான் ? நானும் ஓம் என்று பதிலழிக்க, சற்றும் தயங்காமல் என்னோடு 2 பிரன்ஸ் வருவினம் ஓகேயா என்றான் ? போத்தலை வந்து எடுத்துச் செல்ல ஏன் இவ்வளவு கூட்டம் என எனக்கு புரியவில்லை, சரி என்றேன். பின்னர் 5 நிமிடம் கழித்து திரும்பவும் போன் செய்த அவன், இன்னும் இரண்டுபேர் வர ஆசைப்படுகினம் என்றான். ஓகே வாருங்கள் வந்து என்னை பார்த்துவிட்டு போத்தலை எடுத்து போங்கள் எனக் கூறினேன்.

சிறிது நேரத்தில் ஹோட்டல் அறைக் கதவு, பலமாக தட்ட களைப்பில் அரை நித்திரையில் இருந்த நான் எழுந்துசென்று கதவை திறந்தால் 3 பெண்கள், அத்தோடு 2 ஆண்கள், அதில் ஒருவர் எனது மருமகன், மற்றையவர் அவர் நண்பராம். பாக்கிஸ்தானைச் சார்ந்தவர் என அவன் அறிமுகப்படுத்த, அப்படியானால் நீங்கள் முஸ்லீமா என நான் கேட்க அவரும் ஆம் என்கிறார். முஸ்லீம்கள் தண்ணியடிக்க மாட்டார்களே என நான் மருமகனிடம் கேட்டேன், இவனுக்காகவா போத்தலை கேட்டாய் என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, இன்னொரு அதிர்சியும் வருகிறது.

அங்கு வந்த 3 பெண்களில் ஒருவர் தனது சூ வை லாவகமாகக் கழற்றி நிலத்தில் வைத்துவிட்டு, கட்டில் மேல் ஏறி, ஒரு பொலித்தீன் பையால், Smoke alarm (சிகரட் பிடித்தால், அலறும் அலாமை) சுற்றி கட்டிக்கொண்டு இருக்கிறாள். அப்போது தான் எனக்கே தெரிகிறது, அவர்கள் எனது அறையில் சிகரட் பிடிக்க உள்ளார்கள் என்று. வெளியே ஒரே குளிர் அதனால் தான் என்று எனக்கு ஒரு சாட்டுப்போக்கைச் சொல்லிவிட்டு, வந்த 3 தமிழ் பெண்களில் இருவர் சிகரட் பிடிக்க, மருமகனும், பாக்கிஸ்தானியும் மற்றப்பக்கமாக தாங்கள் கொண்டுவந்த பையைப் பிரித்து ஏதோ தேட அரம்பித்தனர்.

அப்பா அம்மா எல்லாரும் சுகமா என நான் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, 6 கிளாசை வெளியே எடுக்கிறார் என் மருமகன். அப்படியே சிவரோடு சாத்தி பின்னி பெடல் எடுக்கவேண்டும் போல எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. வளர்ந்து மூன்று இலைவிடவில்லை, வாயில் சிகரெட், அத்தோடு நான் கொண்டுவந்திருக்கும் வொட்காவை(vodka) எனது ரூமில்வைத்து அடிக்க பிளான் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. என்னையும் ஒரு இளிச்சவாயன் ஆக்கும் அவர்கள் நடவடிக்கையைப் பார்க்க பொறுக்க முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டனர். அதிலும் என்ன நடக்க இருக்கிறது ? இவர்கள் அடுத்து என்ன செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் என்பதை அறிய முற்பட்டேன்.

கோபப்பட்டு பிரியோசனம் ஒன்றும் இல்லை. இவர்கள் வழியில் போய் மொத்தமாக என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவோம் என என் மனம் என்னைத் தூண்டியது.

இவர்களின் இந்தப் போக்கு எங்குபோய் முடிவடையும் ? அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றியே எனது முழுக்கவனமும் இருந்தது. இவர்கள் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அவர்கள் விரைவாக வெளியே போய்விடுவார்கள். அதனால் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று எண்ணி, அவர்களோடு இணைந்து போவதுபோல நானும் நடித்தேன். எனக்கு ஒரு கிளாஸ் வொட்க்கா வார்க்கப்பட்டது, நானோ எனக்கு அல்சர் இருக்கு ஆனபடியால் கனக்க அடிக்க முடியாது என்று கூறி சிறிதளவு பாவித்துக்கொண்டேன்.

நேரம் ஆக ஆக, அவர்கள் ஜந்துபேரும் ஒருவாறாக போத்தலை அரைவாசி காலி பண்ணியதோடு, போதையில் மிதந்தனர். முதலாவதாக பேச ஆரம்பித்த பெண் , தனக்கு தன் அம்மாவை ரெம்பப் படிக்கும் என்றார், நான் எவ்வளவு குடித்துவிட்டு வீடுசென்றாலும் அவ ஒண்டும் கதைக்க மாட்டா, கதவைத் திறந்தால், நிறைய குடிச்சிருக்காய், மணக்குது சரி சரி போய் படு என்று அவ கூறுவாவாம் என்று சொல்லி ஜக்குபாய் படத்தில் வரும் ஸ்ரேஜா சொல்வது போல ஜ லவ் மை மம்மி என்று புராணம் பாடினாள் !! இது இவ்வாறிருக்க, எனது மருமகனோ தனது 16 வயதுடயை காதலி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதாக இன்னும் ஒரு கதையைச் சொல்லி.. காதலாகி கண்ணீர் மல்கினான் !

போதாக்குறைக்கு மற்றைய 3வரும் வேறுவேறு கதைகளை சொன்னார்கள். அப்பாவிடம் இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெசல் கிளாஸ்(special Class) இருப்பதாக ஒருவர் பொய்சொல்லி வந்திருக்கிறார். மற்றவரோ தான் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று தான் திரும்புவேன் என்று சொல்லிதான் வந்தாராம், குறிப்பாக பெண்கள் எல்லாருமே அப்படிச் சொல்லித்தான் வந்தார்கள் என்றனர். வியப்பில் ஆழ்ந்துபேனேன். எல்லோரின் தாய் தந்தையரையும் நான் இங்கு குறை கூற வரவில்லை என்பதை எமது அன்புள்ள தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும் ! ஆனால் இப்படியும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இரவில் வயதுக்கு வந்த பெண்களை வெளியே அனுப்புவது தாய் மாருக்கு வயிற்றில் கொள்ளிக்கட்டையை வைத்திருப்பது போல என்று சொல்லுவார்கள் ஊரில்.

ஆனால் அங்கு இருக்க முடியாது என்று இங்கு வந்தால், வெள்ளைக்காரர்கள் செய்ய வெட்கப்படும் சிலவற்றை எமது தமிழ் சமூகம் செய்துவருகிறது அருவருக்கத்தக்க விடையமாகும் !

யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு, தமிழர் தாயகம் கலாச்சார சீர்கேட்டால் அழிகிறது என பல புலம்பெயர் இணையங்களும், செய்தி ஊடகங்களும் வாய் கிழியக் கத்துகிறதே, நாம் இருக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை எவராவது திரும்பிப் பார்த்தோமா ? இல்லை எமது பிள்ளைகள் என்ன தான் செய்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தோமா ?

இவை எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு நான் இருக்கும்போதே, அவர்கள் வெளியே கிளம்ப ஆரம்பமானார்கள் ! எங்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால், இரவு நேர களியாட்ட விடுதிதான் வேறு எங்கு என்று தமிழில் பதில் வந்தது….. நானும் சரி செல்லுங்கள் என்றேன், இனி இவர்களைத் தடுக்கும் சக்தி என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவனாய் சொன்னேன். ஆனால் கவனமாகச் செல்லுங்கள் வேற்றின மக்கள் அதிகம் வரும் இடம் என நான் சொல்லி முடிப்பதற்கு முன்னரே, இல்லை இல்லை கனக்க சிறிலங்கன் ஆட்கள், அதிலும் தமிழ் ஆட்கள் அங்க வருவினம் கொஞ்ச நேரத்தில எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வரும் என்றான் மருமகன்.

அப்போது தான் எனக்கு பொறி தட்டியது. அப்ப ஒரு பெரிய கூட்டமே இதன் பின்னணியில் உள்ளதா ? என சந்தேகப்பட்டு, நானும் வரவா என்று கேட்டேன். முதலில் சிரித்த அவர்கள் பின்னர் ஓகே மாமா வாருங்கோ என்றார்கள். ஒருவாறாக நடந்து சென்று நாம் ஆறுபேரும் களியாட்ட விடுதியை அடைந்தால், நுளைவாயிலில் வைத்து எல்லோரும், பாக்கெட்டில் கைகளை விட்டு காசைத் தேடுவது போல நடிக்க ஆரம்பித்தனர்.

நான் களியாட்ட விடுதிக்கு வராவிட்டால் எப்படியும் இவர்கள் அதற்கு செல்வதற்கான 100 குரோனர்களை கட்டாயம் வைத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னை கொண்டு அந்த காசைக் கொடுப்பிக்க அவர்கள் போடும் நாடகத்தை நான் அறிந்தும் அறியாதவனாய் ஆறு பேருக்குமாக 600 குரோனர்களை நான் செலுத்தினேன்.

இப்போது உள்ளே நுளைகிறோம், ஒரே இருட்டு ! போதாக்குறைக்கு புகையையும் அடித்து பாட்டுச் சத்தங்கள் காதைப் பிளக்க, கலர் கலர் லைட்டைப் போட்டு கண்களைக் குத்தவைக்கும் அளவுக்கு ஒரு இம்சை ! இது தான் நைட் கிளப் ! ஆடிக்கொண்டு இருக்கும் பெண்கள், அதைப்பார்த்து ரசிக்கும் ஆண்கள். ஆண்பால் பெண்பால் வித்தியாசம் தெரியாமல் கண்டவனையும் கட்டிப்பிடித்து முத்தம்கொடுக்கும் ஒருகூட்டம் ! தாம் மிச்சம் பிடித்த காசில் ஓடிப்போய் பியரை வாங்கி அடிக்க ஆரம்பித்தார் அந்த பாக்கிஸ்தான் நபர்.

ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த எனக்கு அதிர்சிகள் காத்திருந்தன. நேரம் ஆக ஆக மேலும் மேலும் பலர் கூடி மண்டபமே களோபரமாக இருந்தது. அப்போது அடிக்கடி என்னுடன் வந்து பேசிவிட்டுச் செல்லும் எனது மருமகன் வந்து, இது நதியா, இது சிந்துயா, இது கலா, என பல தமிழ் பெண்களை எனக்கு அறிமுகம் செய்துவைக்கிறான், (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) அறிமுகம் செய்தது போக, செய்யாத தமிழ் பெண்களோடு சேர்த்து சுமார் 25 தமிழ் பெண்கள் அரை குறை உடுப்போடு அங்கு தன்னிலை மறந்து நடனமாடிக்கொண்டு இருந்தனர். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் தானே எனக்கு தெரியவில்லை !

உண்மையைச் சொல்லப்போனால் எதுவும் புரியவும் இல்லை.

தமிழர்களுக்கு ஒரு பாரிய பண்பாடும் எமக்கு என்று ஒரு நாகரீகமும் கொண்டவர்கள் ! வேற்றின மக்களே எம்மைப் பார்த்து வியக்கும் அளவுக்கு சில நல்ல நாகரீகங்களை நடைமுறைப்படுத்தி வருபவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்போடு வாழ்பவர்கள். ஆனால் புலம்பெயர்ந்து வாழ்வதால் இவ்வாறு எம்மை நாம் மாற்றிகொள்ள வேண்டுமா ? இது அவசியம் தானா ? தாய் தந்தையர் இப்படியான பிள்ளைகள் மீது சிறிது அக்கறை எடுத்தால் என்ன ? ஒன்றுமே வேண்டாம், புலம்பெயர் நாடுகளில் உள்ள எத்தனை தமிழ் பள்ளிக்கூடங்கள் தமது மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

கேளிக்கை விடுதிகளுக்கு போகாமல் இருக்க நாம் சொல்லவில்லை. மது பாவித்தால் கூட பரவாயில்லை என்று சொல்லலாம், ஆனால் தமிழ் பெண்கள் சிகரட்டிற்கும் அடிமையாவதா ? பிற்காலத்தில் அவர்கள் மணம் முடிக்கும்போது, கணவனோடு எவ்வாறான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் ? குறிப்பாக பெண்கள் குடிபோதையில் இருக்கும்போதே தமது கற்பை இழப்பதாகவும், அல்லது உடலுறவில் ஈடுபடத் தூண்டுவதாகவும் ஆராட்சிகள் தெரிவிக்கின்றனர். தன் நிலை மறந்து கிடக்கும் பெண்களை, ஆண்கள் தம்வசப்படுத்துவது 89% சாத்தியமாக அமைகிறது. இதன் பின் விளைவுகளை ஏன் பெற்றோர் நினைத்துப் பார்க்க தவறுகின்றனர் ? இப்படியான சூழ் நிலையில் எயிட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்களும் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் பாடசாலைகளுக்கு வார இறுதியில் சென்று தமிழ் மற்றும் கலைகள் பயின்றுவரும் மாணவர்கள் இவ்வாறான கேளிக்கை, மற்றும் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வது மிகக் குறைவாகக் காணப்படுவதாக நாம் நடத்திய கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவருகிறது. அத்தோடு அவர்களின் மனம் இசை தொடர்பாகவோ அல்லது பரத நாட்டியம் தொடர்பாகவோ செல்வதால், அல்லது தமிழ் சம்பந்தப்பட்ட கலைகளோடு தொடர்பு இருப்பதால்.. இயல்பாகவே அவர்களுக்கு எது கெட்டது எது நல்லது என்று புரிந்துகொள்கிறார்கள். சிலர் படிப்பில் தமது முழுநேரத்தையும் செலவிடுவதால் இப்படியான கேளிக்கைகளை தவிர்க்கின்றனர்.

தாய் தந்தையருக்கு பொய்சொல்லிவிட்டுச் சிலரும், பாதி உண்மையைக் கூறி மிகுதிப் பாதியை மறைத்துவிட்டு சிலரும், முழுக்க முழுக்க உண்மையைக் கூறிச் சில பிள்ளைகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் களியாட்ட விடுதிகளுக்குச் செல்கின்றனர் என்பதை, நான் லண்டனில் நடத்திய சிறிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளேன். ஆனால் பெற்றோர்களால் தமிழ் பண்பாடு குறித்து சொல்லிவழர்க்கப்பட்ட பிள்ளைகளும், தமிழ் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளில் கணிசமானோர், மேற்கத்தைய பழக்கவழக்கங்களைத் தவிர்க்கின்றனர் என்பதே உண்மையாகும்.

தாய் தந்தையர் தமது பிள்ளைகளை முதலில் குறைத்து மதிப்பிடுவதை பெற்றோர் நிறுத்தவேண்டும். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள், இப்படிச் செய்யமாட்டார்கள் என ஒரு நம்பிக்கையை வளர்ப்பதை நிறுத்தி முதலில் எலாவற்றிலும் ஒரு சந்தேகக் கண்கொண்டு, பார்ப்பது நல்லது. அல்லது கொஞ்சமாவது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ! அவர்கள் ஒரு வயதைக் கடக்கும்வரை தான் இந்தப் பிரச்சனை இருக்கும், சுமார் 21 வயதை தாண்டினாலே அவர்களுக்கு பொறுப்பு தானாகவே வந்துவிடும்.

எனவே நோர்வே நாடு மட்டுமல்ல, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை எடுக்கவேண்டும். வருங்கால எமது சந்ததிகள் சமூதாயத்தில் நல்லதொரு விருட்சமாக இருக்க நாமே வழிகோலவேண்டும்.

தமிழ் பாடசாலைகள் அனைத்தும் இது குறித்து புதிய கவனம் செலுத்துவது நல்லது. வெறுமனவே சமயத்தையும், நாட்டியத்தையும், தமிழையும் கற்றுக்கொடுக்காமல், எமது சமுதாய பாரம்பரியத்தையும் கற்றுக்கொடுக்கவேண்டும் ! அத்தோடு நின்றுவிடாது எமது ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், அதற்காக நாம் கொடுத்து விலை குறித்தும் சிறார்களுக்கு அறிவூட்டவேண்டும் ! சில தமிழ் பாடசாலைகள் இது ஒரு அரசியல் எனக் கூறி தமிழர்களின் போராட்டத்தை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறுத்துவருகிறார்கள்.

ஈழத் தமிழன் என்று சொன்னால் அவர்கள் தனி நாட்டிற்கான போராட்டம், அதில் ஒரு அங்கமாகும். அதனை மறைப்பது எந்தவகையில் நியாயம் ? ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு அதனை சிறுவனுக்கு படிக்கக்கொடுப்பது போல உள்ளது தற்போதைய நிலை. கிழிக்கப்பட்ட அந்தப் பக்கத்தை படிக்கும் உரிமையும் சிறார்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஈழ விடுதலை, எமது இனத்தினை எவ்வாறு பேரினவாதிகள் அடிமைப்படுத்தினார்கள் என்பது குறித்து சிறுவர்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் அவர்களை நாம் வேறுபாதைக்கு எடுத்துச் செல்லமுடியும்.

குடித்து கெட்டு குட்டிசுவராகுவதற்கு பதிலாக, ஒரு நல்ல விடுதலைவேட்கை கொண்ட இளையோராக, எமது இனைத்தை நேசிக்கும் ஒரு நல்ல மனிதராக எமது இளைஞர்களை நாம் மாற்றவேண்டும். அதில் பெரும் பங்கை பெற்றோரும், தமிழ் பள்ளிக்கூடங்களும் ஏற்று எமது இளைய சமுதாயம் தளைக்க வழிகோலவேண்டும் என்பதே இந்தப் பேதை தமிழனின் ஒரு ஆத

ஜேர்மனியில் ஈழத்தமிழர் அவையை உருவாக்குவதற்கான ஆலோசனை ஒன்றுகூடல்


கடந்த 30 வருடகாலமாக எம் இனத்தின் விடுதலைக்காக மேற்கொண்ட அகிம்சைவழிப் போராட்டத்தின் பின் தொடர்ச்சியான 30 வருட கால ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற போர்வையில் பிராந்திய நலன்கொண்ட சர்வதேச நாடுகளின் அரவணைப்போடு சிங்கள இனவெறி பிடித்த அரசு அழித்தொழித்தது.
ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட எம்மினம் தற்போது முனைப்புடன் மீண்டுமொரு அறவழிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் பரந்துபட்டு வாழ்கின்ற ஈழத் தமிழர்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்டவை போன்று ஜேர்மன் நாட்டிலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஜேர்மன் வாழ் ஈழத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்குபஸ் வண்டி


கிழக்கில் பழம் பெரும் இந்து பாடசாலையான, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு இந்திய அரசாங்கத்தனால் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இப் பஸ்வண்டியை மட்டக்களப்பு ஸ்ரீ இராம கிருஸ்ண மிஸன் பதில் தலைவர் சுவாமி ஞானமஜானந்தா மகராஜ் இன்று காலை பாடசாலையின் பாவனைக்காக அதிபரிடம் கையளித்தார்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவிடம் பாடசாலை அதிபர் எஸ்.ரவீந்திரமூர்த்தி விடுத்த வேண்டுகோளை அங்கீகரித்தே இந்த பஸ்வண்டி வழங்கப்படடுள்ளது.

பஸ்வண்டி கையளிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் உட்பட பலர் கலந்து கொண்டனா்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை


தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி உட்பட்ட 60 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் தம்மை புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

இதேவேளை, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி உட்பட்ட ஏற்கனவே 66 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில பதிவுசெய்யப்பட்டுள்ள

எஸ் எம் கிருஸ்ணா நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு


இந்த மாத இறுதியில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, அம்பாந்தோட்டைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இந்த இரண்டு இடங்களிலும் அமைக்கப்படவுள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் கொன்சியூலர் அலுவலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.

தென்பகுதியில் உள்ள சிங்களவர்களுக்காக சேவைகளை மேற்கொள்வதற்காக அம்பாந்தோட்டையிலும் யாழ்ப்பாண மக்களுக்கு சேவையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலும் இந்த காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அம்பாந்தோட்டையில் இந்திய கொன்சியூலர் அலுவலகம் திறக்கப்படுவதற்கான காரணம், அங்குள்ள சிங்கள மக்களுக்கு சேவை செய்தவற்காகவல்ல.

சீனாவின் ஆதிக்கம், இலங்கையின் தென்பகுதியில் இருக்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவற்காகவே இந்தியா இந்த கொன்சியூலர் அலுவலகத்தை திறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களே


யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக சென்றுள்ள சிங்கள மக்கள் அங்கு வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களே தவிர நிரந்தரமாக குடியிருந்த மக்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி ஏ சந்திரசிறி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாம், 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்ததாக குறிப்பிட்டுள்ள இந்த மக்கள் தமக்கு குடியேறுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் எவ்வித நிரந்தர குடியிருப்பையும் கொண்டிருக்காத மக்களுக்கு எவ்வாறு காணிகளை வழங்கமுடியும் என்ற கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.

அத்துடன் தாம் யாழ்ப்பாணத்திற்கு சென்று குடியேறுவதற்கான எவ்வித உரிய தரப்புடனும் இவர்கள் தொடர்புகொண்டு வந்திருக்கவில்லை என யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்துரைத்த, வடமாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி, யாழ்ப்பாணத்திற்கு சிங்கள மக்கள் மீள்குடியேற சென்றமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், இவ்வாறு சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்வது தொடர்பாக தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மண் எடுத்துச் செல்கின்றனர் சிங்கள மக்கள்


வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை சிங்கள மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள்.

உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும் பெருமாள் உறுதிப்படுத்தினார்.

பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்


விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மத்திய தீர்ப்பாயத்திடம் நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா


யாழ். பல்கலைக்கழகத்தில் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா தற்போது யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு நான்கு அமர்வுகளாக இடம்பெற்று வருகிறது.

முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும் இரண்டாவது அமர்வு முற்பகல் 11 மணிக்கும் மூன்றாவது அமர்வு 1.45 மணிக்கும் நான்காவது அமர்வு 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்முறை யாழ். பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் பேராசிரியர்களாகக் கடமையாற்றிய நால்வருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் மேலும் 1210 பேர் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது பிரதம மந்திரியாக கடந்த வார இறுதியில் தெரிவு செய்யப்பட்ட உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்துவருபவரும், அமெரிக்கச் சட்டத்துறை வல்லுநருமான திரு. விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் ஒரு அமெரிக்க பிரஜையாவார்.

இந் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. உருத்ரகுமாரன் வெளிநாடுகளிற்கு பயணம் செய்கின்ற போது அவரிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களையே அமெரிக்கா கருத்திலெடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகராக தேசியத் தலைவர் பிரபாரகனால் நியமிக்கப்பட்டு அந்தத் பணியில் தொடர்ந்து இருந்து வரும் உருத்ரகுமாரன் அவர்கள் நோர்வேஜிய அனுசரணைப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தேசியத் தலைவரால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Monday, October 4, 2010

நேற்று நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது


இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் 450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, பிரிமா நிறுவனம் அண்மையில் கோதுமை மாவின் விலை 8 ரூபா 50 சதத்தால் அதிகரித்ததன் காரணமாகவே, இந்த முடிவை தமது சங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் கோதுமா மா கிலோ ஒன்றின் விலை 84 ரூபாவாகும்

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 50 ரூபாவாக உயர்வடைய உள்ளது.

அதேநேரம் பாணின் விலையுயர்வு காரணமாக அதனை பிரதான உணவாக கொண்டுள்ள சிங்கள மக்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளனர்.