விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் மத்திய தீர்ப்பாயத்திடம் நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment