யாழ். பல்கலைக்கழகத்தில் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா தற்போது யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு நான்கு அமர்வுகளாக இடம்பெற்று வருகிறது.
முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும் இரண்டாவது அமர்வு முற்பகல் 11 மணிக்கும் மூன்றாவது அமர்வு 1.45 மணிக்கும் நான்காவது அமர்வு 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இம்முறை யாழ். பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் பேராசிரியர்களாகக் கடமையாற்றிய நால்வருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் மேலும் 1210 பேர் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment