Friday, October 8, 2010

சிங்கள மக்கள் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மணியன் தோட்டம் பகுதியில் வசித்ததாக தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக சென்று சிங்கள மக்கள் தாம் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மணியன் தோட்டம் பகுதியில் வசித்ததாக தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில் அந்த இடத்தில் தற்போது தமிழ் மக்கள் குடியிருப்பதால் அதனை தமக்கு தரவேண்டாம் என தெரிவித்துள்ள அவர்கள் அரச காணிகளில் தம்மை குடியமர்த்துமாறு கேட்டுள்ளனர்.

தற்போது சுமார் 180 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளதாக குடியேற வந்த சிங்களவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

தாம் படித்தது தமது பெற்றோர் வர்த்தகம் செய்தமை யாவும் யாழ்ப்பாணத்தில்தான் எனக்குறிப்பிட்டுள்ள அவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் காரணமாக தாம் சேனைக்குடியிருப்புக்கு சென்று பின்னர் அநுரதப்புரத்தின் மிகிந்தலைக்கு சென்று வாழ்ந்து வந்ததாக இந்த சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

தாம் தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவே யாழ்ப்பாணம் வந்ததாகவும் எனினும் அரசாங்க அதிகாரிகள் உரிய வசதிகள் எதனையும் செய்து தரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் ஏற்கனவே வசித்த இடம் என்பதால் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமலேயே யாழ்ப்பாணம் வந்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமக்கு தற்போது தமிழ் மக்களே உதவிசெய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

30 வருடங்களுக்கு பின்னர் வந்திருப்பதன் காரணமாக தற்போதுள்ள இளைஞர்கள் யுவதிகள்சிங்களவர்கள் ஏன் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள் என்ற நிலையில் தம்மை பார்ப்பதாகவும் எனினும் வயது முதிர்ந்தோர் தம்மை வந்து சந்தித்து செல்வதாகவும் இந்த சிங்கள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்

எனினும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக குடியிருந்தமைக்கான எவ்வித உறுதிகளும் இல்லை என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பின் பேரிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகயை எடுக்கமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆராய தாம் நேரடியாக சென்று அவர்களை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment