Friday, October 8, 2010

இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்! :அனலை நிதிஸ் ச. குமாரன்

ராஜீவ் கொலை விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவின் நீதித்துறை அரசியல் அழுத்தம் காரணமாக, நீதி தேவதையின் கண்களை நிரந்தரமாகவே மூடிவிட்டுத்தான் விடுதலைப்புலிகள் மீது அபாண்டமான கொலைக்குற்றத்தை சுமத்தி, அதன் மீதான தடையை விதித்தது.
ஈழம் என்று கூறினாலே குற்றமென்ற நிலை இந்தியாவில். பொடா சட்டத்தின் மூலமாக பயமுறித்தி மானமுள்ள தமிழரின் வாயை மூடியது இந்திய அரசு.

அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டே வந்தார்கள். ஒரு சிலரைத்தவிர, பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே புலியென்ற வார்த்தையை கூறினாலே கிலிகொண்டு ஓடும் பரிதாப நிலை. ஈழம் வரை சென்று புலிக்கொடி ஏற்றிய ராஜராஜனை போற்றி விழா நடத்துபவர்கள், பாவம் அவனின் வம்சாவளியினர் இன்று மரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றார்கள். ராஜராஜனின் மன்னர்கள் ஆண்ட ஈழத் தேசம் இன்று சிங்களத் தேசமாக மாற்றப்படுகின்றது.

தமிழக அரசோ சிங்கள அரசியல்வாதிகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளித்து, தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளுக்கும் உல்லாசப் பயணம் செய்ய அனுமதிக்கின்றது. ஆனால், ஈழத்தமிழர் மீது பல தடைகளை போட்டு அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு பிரயாணம் செய்தால் காவல்துறையினர் புலி என்று பொய்க்குற்றம் சுமத்தி கைது செய்கின்றது. இது தான் இன்றைய தமிழக நிலை.

No comments:

Post a Comment