Friday, October 8, 2010

சரத் வழக்கில் இருந்து தாம் விலகுவதாக நீதியரசர் லேகம் வசம்

சரத் பொன்சேகாவுக்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பேராணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று நீதியரசர்களான சத்யா ஹெட்டிகே மற்றும் லேக்கம் வசம் ஆகியோரின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கில் இருந்து தாம் விலகுவதாக நீதியரசர் லேகம் வசம் தெரிவித்தார்.


அதனையடுத்து இவ் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நீதியரசர் சத்தியா ஹெட்டிகே இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு சரத் பொன்சேகாவின் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது.

இதனை அடுத்து இந்த வழக்கு எதிர்வரும் 15ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நீதியரசர்களான கோகுல் குலதுங்க மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment