Wednesday, October 6, 2010

யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களே


யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக சென்றுள்ள சிங்கள மக்கள் அங்கு வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களே தவிர நிரந்தரமாக குடியிருந்த மக்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி ஏ சந்திரசிறி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாம், 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்ததாக குறிப்பிட்டுள்ள இந்த மக்கள் தமக்கு குடியேறுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் எவ்வித நிரந்தர குடியிருப்பையும் கொண்டிருக்காத மக்களுக்கு எவ்வாறு காணிகளை வழங்கமுடியும் என்ற கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.

அத்துடன் தாம் யாழ்ப்பாணத்திற்கு சென்று குடியேறுவதற்கான எவ்வித உரிய தரப்புடனும் இவர்கள் தொடர்புகொண்டு வந்திருக்கவில்லை என யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்துரைத்த, வடமாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி, யாழ்ப்பாணத்திற்கு சிங்கள மக்கள் மீள்குடியேற சென்றமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், இவ்வாறு சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்வது தொடர்பாக தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment