Wednesday, October 6, 2010

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்குபஸ் வண்டி


கிழக்கில் பழம் பெரும் இந்து பாடசாலையான, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு இந்திய அரசாங்கத்தனால் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இப் பஸ்வண்டியை மட்டக்களப்பு ஸ்ரீ இராம கிருஸ்ண மிஸன் பதில் தலைவர் சுவாமி ஞானமஜானந்தா மகராஜ் இன்று காலை பாடசாலையின் பாவனைக்காக அதிபரிடம் கையளித்தார்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவிடம் பாடசாலை அதிபர் எஸ்.ரவீந்திரமூர்த்தி விடுத்த வேண்டுகோளை அங்கீகரித்தே இந்த பஸ்வண்டி வழங்கப்படடுள்ளது.

பஸ்வண்டி கையளிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் உட்பட பலர் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment