Wednesday, October 6, 2010

ஜேர்மனியில் ஈழத்தமிழர் அவையை உருவாக்குவதற்கான ஆலோசனை ஒன்றுகூடல்


கடந்த 30 வருடகாலமாக எம் இனத்தின் விடுதலைக்காக மேற்கொண்ட அகிம்சைவழிப் போராட்டத்தின் பின் தொடர்ச்சியான 30 வருட கால ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற போர்வையில் பிராந்திய நலன்கொண்ட சர்வதேச நாடுகளின் அரவணைப்போடு சிங்கள இனவெறி பிடித்த அரசு அழித்தொழித்தது.
ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட எம்மினம் தற்போது முனைப்புடன் மீண்டுமொரு அறவழிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் பரந்துபட்டு வாழ்கின்ற ஈழத் தமிழர்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்டவை போன்று ஜேர்மன் நாட்டிலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஜேர்மன் வாழ் ஈழத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment