Monday, October 4, 2010

சரத் பொன்சேகாவிற்கு குறைந்தப பட்ச தண்டனைகளின் மூலம் நாட்டின் ஒழுக்கம் பாதிக்கப்படக் கூடும் மேர்வின் சில்வா


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு போதியளவு தண்டனை விதிக்கப்படவில்லை என பிரதி பெருந்தெருக்கள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், வெள்ளைக்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குறைந்தப பட்ச தண்டனைகளின் மூலம் நாட்டின் ஒழுக்கம் பாதிக்கப்படக் கூடும் எனவும், கடுமையான தண்டனை வழங்கி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே ஊடகங்களும், பௌத்த பிக்குகளும் குரல் கொடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனையவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள காலங்களில் எவரும் ஏன் குரல்கொடுக்க முன்வருவதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

களனி பிரதேச சபையில் சற்று முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment