Monday, October 4, 2010

பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்பு பரிவார வாகனங்களில் ஒன்றே குழாயில் மோதுண்டுள்ளதென இணையத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்வின் டிபென்டர் ரக வாகனமொன்று பிரதான நீர்க் குழாயில் மோதியதனால் கொழும்பு நகரிற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் பிரதான குழாயில் குறித்த வாகனம் மோதுண்டதாகவும், இதனால் பாரியளவு நீர் வெளியேறி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தியவன்னா ஓயாவிற்கு அருகாமையில் காணப்படும் பிரதான நீர் விநியோகக் குழாயே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தெஹிவளை, கல்கிஸை, கொகுவல, களுபோவில, படோவிட, முல்லேரியா, அத்டிய, இரத்மலானை, கொஹிலவத்த, கொட்டிக்காவத்த, உடுமுல்ல, தும்முல்ல, ஹவ்லொக் வீதி, பாமன்கடை, பம்பலப்பிட்டி, கிருலப்பனை ஆகிய பிரசேதங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்பு பரிவார வாகனங்களில் ஒன்றே இவ்வாறு குழாயில் மோதுண்டுள்ளதென குறித்த இணையத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment