வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தம்மிடம் தெரிவித்ததாக சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியை பெட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
“இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த வந்த விடுதலைப் புலிகளை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு கட்டளையிட்டதாக தமக்கு அறியக் கிடைத்ததென சரத் பொன்சேகா என்னிடம் தெரிவித்தார்” என பெட்ரிக்கா ஜேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது ஆசிரியை இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதவான் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி. வராவௌ மற்றும் எம். இசட் ரசீம் ஆகிய நீதவான்களின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமக்கு அளித்த விசேட செவ்வியின் போது இந்த விடயங்களை குறிப்பிட்டதாக பெட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 8ம் திகதி செவ்வியளித்த போது தமக்கு இந்த விடயங்களை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக தாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டதாக அவர் மேலும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் நாளை மறுநாள் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சரத் பொன்சேகாவை ஏனைய கைதிகளுடன் இணைத்து சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துவர வேண்டாம் என அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்
No comments:
Post a Comment