கண்டி மாவட்டத்தில் பேராதனையை அண்மித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேரை கண்டி பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.
கண்டி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட 10 பங்களாதேஷ் பிரஜைகளும் வீசா முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருந்துள்ளனர். அவர்கள் தங்கி இருந்ததற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணைகள் முடிவடைந்ததும் சந்தேக நபர்கள் கண்டி பிரதம நீதவான் மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment