இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தி னால் விதிக்கப்பட்ட தீர்ப்பு அரசியல் அழுத் தங்களுக்காக மாற்றிக் கொள்ளப்படமாட்டாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினால் மாத்திரமே தண்டனையை தளர்த்துவது தொடர்பில் ஆராய முடியும். இப்படிப் பாதுகாப்புச்
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தி னால் விதிக்கப்பட்ட தீர்ப்பு அரசியல் அழுத் தங்களுக்காக மாற்றிக் கொள்ளப்படமாட்டாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினால் மாத்திரமே தண்டனையை தளர்த்துவது தொடர்பில் ஆராய முடியும். இப்படிப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனையை இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனையானது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு விதிக்கப்பட்டது அல்ல என்று பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
மூன்றாம் தரப்பினரின் அழுத்தங்களின் ஊடாகவோ அல்லது போராட்டங்களின் மூலமோ சரத் பொன்சேகாவுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேட்கமாட்டார் மன்னிப்பு
சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரமாட்டார் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறினார்.
சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பானது ஓர் அரசியல் பழிவாங்கலே என்றும் அவர் சொன்னார்.
அத்துடன், சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்களின் ஆதரவு திரட்டப்படும் எனவும், சிவில் நீதிமன்றத்தினூடாக சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய கூட்டங்களில் அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடுவதன் மூலம் சரத் பொன்சேகாவை விடுவிக்க முடியாது என பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment