விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின் றோம். ஆனால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக் கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின் றோம்.
ஆனால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக் கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமிழ் மக்கள் தொடர்பாகத் தெரி வித்த கருத்துக்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அந்த அறிக்கையில், அவர் மேலும் தெரிவித்துள்ளவை வரு மாறு:
தமிழ் மக்களின் அழிவுக்கும் அவல வாழ்க்கைக்கும் அரசு மாத் திரம் காரணமல்ல. பிரதான பாத் திரம், ஐக்கிய தேசியக் கட்சிதான். அன்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்வை முன்வைத்திருந்தால் இன்று இவ்வாறானதோர் நிலை உருவாகியிருக்காது.
அன்று அவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சி, இன்று தமிழ் மக்களின் போராட்டம் முடிந்து விட்டது என்று கூறுவது விந்தையானதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்காவினால் எவ்வாறு கூற முடியும்? புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். ஆனால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
இந்த ஜனநாயகப் போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டன என்று அத்தநாயக்க கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?
தமிழ் மக்களை நேசிப்பதாகக் காட்டும் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு கூறுவதன் மூலம் அதன் இரட்டை முகம் வெளிப்படுகின்றது. இவ்வாறு பா.அரியநேத்திரன் எம்.பி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment