நாட்டை முழுமையாக மீட்டு ஐக்கியத்தில் கட்டியெழுப்பிவரும் நிலையில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கமாகவுள்ளது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவைக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு கூறினார். மேலும்,மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி, நிறம் என பேதம் பார்ப்பதில்லை. வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றோம் என்றார்.
முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது தம் வசம் உள்ளதாகக் கூறிய மஹிந்த, பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர். கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றுள்ளார்.
No comments:
Post a Comment